விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை, இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தொடர்ந்து பல கிசுகிசுக்கள் வெளியாகிறது. தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் பற்றிய தனிப்பட்ட விசயங்கள் குறித்த வதந்தி செய்திகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று டிவிட்டர் பக்கத்தில் சங்கீதா – விஜய் விவாகரத்து குறித்த தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளனர்.அதாவது , சமீபகாலமாக விஜய்யால் சங்கீதா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும்
அதனால் குழந்தைகளோடு லண்டனில் வசித்து வருவதாகவும் அதனால் மன கஷ்டத்தில் விஜய் விவாகரத்துக்கு முடிவெடுத்ததாகவும், சங்கீதாவின் தோழிகள் கூறினார்களாம். அதேபோல், பட தோல்விகளால் மனதளவில் விஜய் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல வெற்றிகளால் தாய், தந்தையை பார்க்காமல் இருந்து வந்த விஜய் தற்போது பெற்றோர்கள் மற்றும் குழந்தை மனைவியை புறக்கணித்தும் வருவதாக கூறப்படுகிறது.இது எந்த அளவிற்கு உண்மை என்பது விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கூறினால் தான்
உண்மை வெளிப்படும் என்று அந்த ஊடகம் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறது. ஆனால் விஜய் எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் மனைவி சங்கீதாவுடன் தான் ஜோடியாக செல்வார். ஆனால் சமீபகாலமாக விஜய் அதையெல்லாம் தவிர்த்து வருவதுதான் இந்த வதந்தி செய்திகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு உண்மையான தகவலும் வெளிவரவில்லை. விஜய் தரப்பில் இருந்தும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும்,
நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.அவர் கூறியதில், நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சஞ்சய் மற்றும் திவ்யாவின் படிப்பிற்காக தான் சங்கீதா வெளிநாட்டில் இருக்கிறார். மற்றபடி விஜய்க்கும் சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை என கூறியுள்ளாராம் பயில்வான். இத்துடன் விஜய் – சங்கீதா விவகாரத்து சர்ச்சை நிற்குமா இல்லை மீண்டும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..