ரவீந்தர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு அவரது மனைவி மகாலட்சுமி பதில் ஒன்றினை அளித்துள்ளார். ரவீந்தர் மகாலட்சுமி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார். பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, அதில் 15 லட்சத்தினை வாங்கியுள்ளாராம். ஒரு ஆண்டுகள் கடந்தும் ரவீந்தர் அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்பதால், அந்த நபர் அமெரிக்காவிலிருந்து சில ஆதரங்களை சமர்பித்து, ஆன்லைன் மூலம் சென்னை கமிஷ்னருக்கு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
ரவீந்தரின் தற்போதைய புகைப்படம் இந்நிலையில் ரவீந்தர் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்துடன், இந்த உலகத்தில் நம்மை அதிகமாக வெறுப்பவர்கள் சூழ்ந்திருந்தாலும், அன்பு எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்பதை உணர்த்துவோம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். ரவீந்தருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரது மனைவி மகாலட்சுமியும் புகைப்படத்திற்கு லைக் செய்ததுடன், நான் தான் இந்த படத்தினை எடுத்தேன் என்பதை ரவீந்தர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதையும் கருத்தில் பதிவிட்டுள்ளார்.