நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா.இவருக்கு முதல் படமே யாரும் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அமைந்ததால் தமிழில் முக்கியமான நடிகையாக கவனிக்கப்பட்டார்.இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.இவர் 1984 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி என்ற ஊரில் பிறந்தார். இவர் ரத்னகிரியில் புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மும்பையில் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.தமிழ் சினிமாவில் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன், நடிகர் அஜித்துடன் இணைந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார்.இப்போது படங்களில் பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் ஜெயம் படத்தில் நடித்த போது ஒரு காட்சியில் நடிக்க மறுத்தது குறித்து பேசியுள்ளார்.
தெலுங்கில் ஜெயம் படம் எடுத்த போது வில்லன் கோபிசந்த் சதாவின் கன்னத்தை நக்குவது போன்ற காட்சியை எடுக்க வேண்டும் என இயக்குனர் தேஜா கூறியுள்ளார். ஆனால் அதற்கு சதா மறுக்கவே , அந்த காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி எப்படியே எடுத்துள்ளார்.இதுபற்றி பேசியுள்ள சதா “அந்த காட்சி எடுத்ததும் வீட்டுக்கு சென்று நிறைய நேரம் அழுதேன். பல முறை கன்னத்தை தண்ணீரால் கழுவினேன். அந்த காட்சியில் நடித்ததற்காக இப்போது வரை வருத்தப் படுகிறேன். இப்போது அந்த காட்சி தொலைக்காட்சியில் ஓடினால் அதைப் பார்க்காமல் எழுந்து போய் விடுவேன்” எனக் கூறியுள்ளார்.