நடிகர் பிரபுதேவா மீண்டும் அப்பாவாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியில் முடிந்த காதல் திருமணம் தமிழ் சினிமாவில் “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு” என்ற திரைப்படத்தில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் அறிமுகம் கொடுத்தவர் தான் பிரபுதேவா. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுடன் கலக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பிரபுதேவா கடந்த 1995ம் ஆண்டு “ரமலத் ” என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார், அதன் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது.பின்னர் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். இவர்களுக்குள் திருமணம் நடந்து விட்டது எனவும் பல வதந்திகள் அந்த காலக்கட்டத்தில் பரவி வந்தது, அதுவும் சரியாக அமையவில்லை.என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா? இந்நிலையில் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் வைத்தியர் ஹிமானி சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தன்னுடைய மனைவியுடன் திருப்பதிக்கு சென்று வந்தார்.இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், பிரபுதேவா பற்றி அவரின் மனைவி ஹிமானி சிங் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த ஹிமானி சிங்கிற்கு அழகிய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.