தமிழில் முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் வடிவேலு.நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு உயரத்தை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இத்தனை ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கணமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வடிவேலு நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சமீபகாலமாக வடிவேலு குறித்து அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகள் புகார்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவி ஸ்ரீ வடிவேலு பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் , வடிவேலு சார் உடன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.உடனே இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்துல நடிச்சேனே சார்னு சொன்னதும், யார் அந்த குண்டச்சியானு கேட்டாரு. ஆமா சார்னு சொன்னதும், நான் வாய்ப்பு கேட்கும் முன்பே, நான் கூப்பிடுறேன்மானு சொல்லிட்டு போனை வச்சிட்டாரு.
அப்போது தான் வடிவேலு இப்படி தான் இருப்பாரு என தெரியவந்தது. அவர் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்காரு என சூசகமாக வடிவேலுவை தாக்கி பேசி இருக்கிறார் தேவி ஸ்ரீ. இதையடுத்து எனக்கு விவேக் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விவேக் படத்தில் நடித்த பிறகு எனக்கு வடிவேலு அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுக்கு போனில் அழைத்து வாய்ப்பு கேட்டேன் ஆனால் நான் யார் என்று தெரியாதது போல் என்னிடம் பேசினார். பின்னர் வடி