நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரேமபிரியா. இவர் அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருப்பார்.தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி மூலம் நகைச்சுவை செய்து அசத்தியவர் வைகைப்புயல் வடிவேலு. பல பிரச்சனைகளுக்கு இடையே தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நாய் சேகர் returns படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகர் வடிவேலு. நடிகர் வடிவேலுவுக்கும் திரையுலகிலுள்ள பலரும் அவ்வப்போது வாக்குவாதங்களுக்கும், பிரச்சனைகளும் எழுந்ததுள்ளது. அந்த வகையில் நடிகர் நம்பிராஜன் என்பவருக்கும் வடிவேலுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே கடுமையான கோபம் வர நம்பிராஜன் வடிவேலுவை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேமபிரியா, வடிவேலுவால் தான் என்னுடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.இதனை பார்த்த ஒரே ஒருவர் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தான் இதனை அவரே ஒரு பேட்டியில் தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும் இது எனக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது எனவும் பார்த்த ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த மாதிரி ஒரு சில பிரச்சினையால்தான் வடிவேலு அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனார் எனவும். சரியாக அனைவரிடம் நடந்து கொண்டிருந்தால் தற்போது அவர் அதிகமான படங்கள் நடித்து இருப்பார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், பிரேமபிரியா ஒரு நல்ல நடிகை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் என் வாழ்க்கையை வடிவேலு கெடுத்துவிட்டார் என்று அவர் கூறியது ஒரு பொய்யான தகவல். அது தவறான விஷயம். பிரேமபிரியா வடிவேலுவை வைத்துத் தான் பிரபலமானார் என்று பயில்வான் கூறியுள்ளார்.