தமிழ் சின்னத்திரையில் பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் சாய் பிரியங்கா.இது தவிர பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி இருக்கின்றார்.சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை சாய் பிரியங்கா ரூத். கோயம்புத்தூரை சார்ந்த இவர் சன்டிவியில் ஒளிப்பரப்பான ‘கேளடி கண்மணி’ என்ற தொடர் மூலம் தனது கெரியரை துவங்கினார். மேலும், பூவே பூச்சூடவா. கல்யாணமாம் கல்யாணம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் இறுதியாக பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்து இருந்தார்.தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
முன்பெல்லாம் ஒரு உறவில் இருந்து பிரிவதென்பது சம்பந்தப்பட்ட இருவருக்கும் வலி நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆனால், சமீபகாலமாக தங்களுக்கு பிடிக்காத உறவுகளில் இருந்து விலகுவதை கொண்டாட்டமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர் மக்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டைவர்ஸ் போட்டோஷுட் நடத்தி பரபரப்பை கிளப்பினார் சீரியல் நடிகை ஷாலினி. இந்நிலையில் நடிகை ஒருவர் தனது பிரேக்கப்பை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அவர் காதலரை பிரேக்கப் செய்த விஷயத்தை தான் வீடியோவில் அறிவித்து இருக்கிறார். அவர் பிரேக்கப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கிறார்.மேலும் அவரது ex அனுப்பிய மெசேஜ்களை தற்போது விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram