Grazia Millennial Awards 2023 விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை உர்ஃபி ஜாவத் மிகவும் மோசமான ஆடையில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினர். அஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் கிராசியாவுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் ஃபேஷன் தளம், நேற்று மும்பையில் Grazia Millennial Awards 2023 விருது விழா ஒன்றை நடத்திய நிலையில், இதில் ஆதித்யா ராய் கபூர், திஷா பதானி, உர்ஃபி ஜாவேத், பூமி பெட்னேகர் மற்றும் பலர் தங்கள் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தி, சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தனர். இந்த விருது விழாவில் உர்ஃபி ஜாவித்… அணிந்திருந்த மேலாடை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. பொதுவாகவே உர்ஃபி ஜாவேத், பாலிவுட் திரையுலகின் ஃபேஷன் ஐகானாக பார்க்கப்படுகிறார்.
அவர் தனது நகைச்சுவையான DIY ஆடைகளுடன் வெளியே வரும்போதெல்லாம் பலர் தலையை கீழே போட்டு கொண்டு செல்லும் அளவுக்கு இவரின் பேஷன் மிகவும் கொடுமையான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இது நாள் அணிந்து வந்த உடைகளையே மிஞ்சி விட்டது, விருது விழாவில் உர்ஃபி ஜவாத் அணிந்திருந்த உடை. இந்த ஆடை உருவான விதம் குறித்து உர்ஃபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளார், அதில் அவரது வெற்று உடலில் பிளாஸ்டர் ஊற்றப்பட்டது. அவர் தனது வரவிருக்கும் தோற்றத்தைக் குறிக்கும் வகையில்
“ஏதோ பைத்தியக்காரத்தனமாக வருகிறது” என்று அந்த விடியோவுக்கு கேப்ஷன் போட்டிருந்தார். தன்னுடைய மார்பகத்தை அச்சில் வார்த்து, கோல்டன் கலரிங் செய்து அதையே உடையாய் அணிந்திருந்தார். பலர் மத்தியில் உர்ஃபி ஜாவத்தின் இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. உர்ஃபி ஜாவத், பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். முதல் வாரத்திலேயே வெளியே வந்த இவர், தினமும் விதவிதமான கவர்ச்சி உடையில் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.