இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம்தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படத்தின் பாடல்கள் அனிரூத் இசையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மனசிலாயோ என்ற பாடலில் மஞ்சு வாரியரின் ஆட்டம்தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மஞ்சு வாரியர்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் வேட்டையன் படத்தில் தான் கமிட்டாகியது எப்படி என்றும் சூப்பர் ஸ்டாருடன் நடித்தது குறித்தும் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதில், அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் சார் தான் என்னை கூப்பிட்டார். துணிவு படத்தில் நடிக்க இயக்குநர் எச் வினோத் சார் தான் கூப்பிட்டார். அவர் படத்தில் தான் நடிக்க போகிறேன் என்று தெரியுமே தவிர அஜித் சாருடன் நடிக்கிறேன் என்று வினோத் சார் சொல்லி தான் தெரியும்.
வேட்டையன் படத்திலும் அப்படித்தான், ஞானவேல் சார் நடிக்க கூப்பிட்டார். ஜெய்பீம் படத்தை பார்த்தப்பின் ஞானவேல் சார் கால் செய்து நடிக்க கேட்டதும் ஓகே சார் என்று கூறிவிட்டேன். அதன்பின் தான் ரஜினி சாரோட படம் என்று தெரிந்தது ஷாக்காகிவிட்டேன். எனக்கு அது பெரிய பாக்கியம் தான். தனுஷ், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது எனக்கு பாக்கியம் தான் என்று மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.