‘பள்ளி காலத்திலிருந்தே நடித்து வருகிறேன். காதல், க்ரஷ் என்றெல்லாம் எதுவும் எனக்கு வந்ததில்லை, ஆனால்.. 80களின் நடிகை மாதிரி, சீரியல் ஆரம்பித்த காலத்தில் பிரபல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதுர்கா. சிறப்பான நடிப்பால் இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்த அவர், குடும்பத் தலைவியாக வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டு அவர் அளித்த பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. இதோ அந்த பேட்டி: ‘‘ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் விளம்பரத்திற்காக தான் முதன் முதலில் கேமராவில் நடிக்க வந்தேன். சீரியலில் நடிக்க அம்மா அப்பா சொல்லிக் கொடுத்தார்கள் என்பதை விட, அவர்கள் என்னை அழைத்துச் செல்வார்கள். என்னுடைய இயக்குனர்கள் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்.
என்னிடம் என்ன வரும் என்பது இயக்குனர்களுக்கு தான் தெரியும். அவர்களின் திறமையால் தான் நான் நடித்தேன். நடிக்கும் போது நான் ரொம்ப பிஸியாக இருந்தேன். பிரேக் என்று பார்த்தால், என் தேர்வுகளுக்கும், கல்யாண நேரத்தில் தான் எடுத்தேன். எனக்கு சரியான கேரக்டர் இல்லை என்று தோன்றினால், அதனால் சில காலம் ப்ரேக் ஆகியிருக்கிறது. மற்றபடி நான் ப்ரேக் எடுத்ததே இல்லை. சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ துர்கா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கி அதன்
பின்னர் இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ஸ்ரீ துர்கா பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.அதில் அவர், பள்ளி பருவத்தில் இருந்து நடித்து வருகிறேன். அப்போது காதல், க்ரஷ் என்றெல்லாம் எதுவும் எனக்கு வந்ததில்லை. யார் அழகாக இருந்தாலும் பார்ப்பேன். நான் திருமணமே பண்ண கூடாது என்று இருந்தேன். அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. என் கணவரை சந்தித்தப் போது, அவர் என் கருத்துகளோடு இருந்தார். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.