தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ஜெயிலர், ஜவான், லியோ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மேடையில் பேசும் போது அனிருத்தை பற்றி புகழ்ந்து பேசியிருந்தார். இளையராஜா – ஏ ஆர் ரகுமானின் காமினேஷன் அனிருத்திற்கு இருக்கிறது.
அனிருத் அப்பா – அம்மா முதலில் லவ்-கிவ் பண்ண கால உடைச்சிடுவேன்னு, 4, 5 பொண்ணு காமிச்சாங்க அனிருத் ஒத்துக்கல. இப்ப ஐயா நீ யாரையாவது லவ் பண்ணிக்கப்பா, கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லும் அளவிற்கு வந்துட்டாங்க.
அனிருத் பத்தி நெல்சன், நண்பர்கள் கிட்ட கேட்டா, வாய்ப்பே இல்ல சார்ன்னு சொல்றாங்க, எப்படின்னு கேட்டா, லவ் பண்றாங்கன்னா 4, 5 வாட்டியாவது செல்போன்ல பேசுவாங்க, அவர் அதை தொடவே மாட்டார் சார் என்று சொல்றாங்கன்னு ரஜினிகாந்த் காமெடியாக கூறியிருக்கிறார்.