தமிழ் சீரியல் நடிகை நிவிஷா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் மூலம் பிரபலமானார் . நடிகை நிவிஷா ஒரு தமிழ் பெண் தான்.1995 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிறந்தவர் நிவிஷா. இவரது பெற்றோர் மற்றும் குடும்பம் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் . இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த நிவிஷா . சினிமா வாய்ப்புகளையும் தேடி வந்தார். அப்போது தான் 2018 ஆம் ஆண்டு இவழுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தில் நடித்தார் அதன் பின்னர் 2 படங்களில் நடித்தார் நிவிஷா.
ஆனாலும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நிவிஷா.அப்போது சன் டிவியில் தெய்வமகள் தொடரில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் . பின்னர் விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்தார். அதன் பின்னர் நிவிஷா நடித்த ஈரமான ரோஜாவே தொடர் இவருக்கு எதிர்பார்த்த அறிமுகத்தை கொடுத்தது.தொடர்ந்து கண்ணம்மா , சிவாகமி , முள்ளும் மலரும், ஓவியா, கங்கா என பல தொடர்களில் நடித்துள்ளார் நிவிஷா.
இப்போது மீண்டும் சன் டிவியில் ஒரு தொடரில் அறிமுகமாக உள்ளார்.சினிமாவில் தனக்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன திரை மூலம் இப்போது தனக்கான இடத்தை பெற்றுள்ளார் நிவிஷா.இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிவிஷா பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . இன்ஸ்டாவில் இவரை 6லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். நிவிஷாவின் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.