தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களின் ஒருவர் சரத்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்து மேடையில் அமராதீர்கள், கீழே போய் அமருங்கள் என திமிராக கூறினார் என அந்த பத்திரிகையாளர் கோபத்துடன் போர் தொழில் படக்குழுவை கோபத்துடன் பேசினார். இதனால் படத்தின் இயக்குனரும் சற்றும் பதிலளிக்க முடியாமல் தடுமாறினார். இப்படியொரு நிலையில், உடனடியாக பேசிய சரத்குமார், ‘அப்படி அவர் பேசியிருந்தால் அது மிகவும் தவறு, அவருக்காக பத்திரிகையாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்.
போர் தொழில் படம் கடந்த மாதம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக வளம் வந்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாட போர்த் தொழில் டீம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும் அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து ஆர்டிஸ்ட்களும் கலந்து கொண்டு தனது பங்களிப்பை செலுத்தினர். இந்த நிலையில் விழா தொடங்கும் முன்பு போர் தொழில் படத்தில்
பணியாற்றிய காஸ்ட்யூம் டிசைனர் ஒருவர் பத்திரிக்கையாளர் ஒருவரை கீழே அமரும்படி வலியுறுத்திருக்கிறார். இதனை அடுத்து அந்த பத்திரிகையாளர் மிகுந்த கோபத்துடன் கீழே அமர்ந்திருக்கிறார். இதனை அடுத்து விழா மேடையில் அனைவரும் படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து படத்தை இயக்கிய இயக்குனரிடம் போர் தொழில் டீம் அனைவரும் தலைக்கனம் பிடித்தவர்களா என்று இயக்குனர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.