நடிகை கமலினி முகர்ஜி தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கமலினி முகர்ஜி 2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் அறிமுகமானவர் நடிகை கமலினி முகர்ஜி. கமலின் மனைவியாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார்.தொடர்ந்து, காதல்னா சும்மா இல்லை படத்தில் நடித்தார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா நடித்த இறைவி படத்தில் நடித்திருந்தார்.உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாபெரும் ஹிட் திரைப்படமாக வெளியானது வேட்டையாடு விளையாடு.
இந்த படத்தில் கமலஹாசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. இவர் இந்தியில் அறிமுகமாகிய பின் தெலுங்கு மூலம் பிரபலமடைந்தார். தமிழில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்தவர் கமலினி முகர்ஜி. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடல் எடை கூடி ஆளே மாறி போய் நடிகை கமலினி முகர்ஜி அந்த புகைப்படத்தில் இருக்கிறார்.
வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த நடிகையா இது என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் அதிர்ச்சி இந்நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்தார். அதில் உடல் எடை கூடி காணப்பட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். தற்போது அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இதற்கிடையில், ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தின் மெருகூட்டப்பட்ட மறுவெளியீடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.