தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த வாரம் மெய்யழகன் படம் திரைக்கு வரவுள்ளது.செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டு தமிழ் மக்களுக்கும் ஒரு அவமானத்தை பெற்றுக் கொடுத்ததாக நடந்திருக்கிறது கார்த்தி மன்னிப்பு கேட்ட சம்பவம். இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன்.
வரும் 27ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் ஒட்டுமொத்த பட குழுவும் ஆந்திராவிற்கு சென்று இருந்தனர். அங்கு நடந்த ஒரு உரையாடலில் தான் ஒரு பெரிய பிரச்சினையே ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியிடம் லட்டு குறித்து ஒரு கேள்வி கேட்க,
அதற்கு அவர் இது சென்சிட்டிவ் விஷயம் கருத்து வேண்டாம் என சொன்னார்.ஆனால், பவன் கல்யாண் இதை கடுமையாக எதிர்க்க உடனே கார்த்தி மன்னிப்பு கேட்டார். இதற்கு ரசிகர்கள் தப்பே செய்யாமல் ஏன் மன்னிப்பு கேட்குறீர்கள் என கடுமையாக கொந்தளித்து வருகின்றனர்.மேலும், உங்களுக்கு ஆதரவு தந்த எங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கொந்தளித்து வருகின்றனர்.