நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூறினர்.இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழப்போவதாக கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதற்கான காரணம் என்ன என்று கூறி பல கேள்விகள் எழுந்தது. ஒருசிலர், நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் காட்டியதாகவும், சில நடிகைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இப்படி தனுஷ் நடந்து கொள்கிறார் என்று கூறியதாக பல விமர்சகர்கள் பலவிதமாக கூறி வந்தனர்.
இந்நிலையில் பிரிந்து மட்டுமே வாழ்கிறார்கள் இன்னும் சட்டப்படி இருவரும் விவாகரத்துக்கு அணுகவில்லை என்று பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர்.ஆனால் இதற்கு முக்கிய காரணம் தனுஷின் பிளான் தானாம். ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டால் எங்கே சொத்து எல்லாமே பரிபோய்விடுமே என்ற நோக்கில் அதற்கு வேண்டாம் என்று இருக்கிறாராம் நடிகர் தனுஷ்.சமீபகாலமாக இணையத்தில் பேசும் செய்திகளாக வளம் வருவது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான்.
பரஸ்பரமாக பிரியவுள்ளோம் என்றும் தனிப்பட்ட விஷயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறித்தது முதல் தற்போது வரை பல செய்திகள் வதந்திகளாக பரவி வருகிறது. அதில் ஒன்று தான் விவாகரத்துக்கு நடிகைகளுடன் தொடர்பு, கடன் பிரச்சனை, வீடு கட்டுவது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் தனுஷிற்கு ஆரம்பத்தில் கொடுத்த ருத்ராட்சட்த்தை திருப்பி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த ருத்ராட்சத்தை எங்கு போனாலும் பெருமையாக கூறி வருவார்.
அது அவருக்கு ராசியாக அமைந்தது என்றும் தெரிந்த ஒன்று. பொண்ணே வேண்டாம் அப்போ அது மட்டும் எதற்கு என்று தனுஷிற்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாம். இப்படியே போனால் பிள்ளைகள் கிட்டயும் வந்திடுவாங்களோ.. ஆனால் ஐஸ்வர்யா எவ்வளவோ வற்புறுத்தி விவாகரத்து வேண்டும் என கூறியும் தனுஷ் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். இதற்கு முழு காரணம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.