விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை பாவனி ரெட்டி தற்சமயம் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பாவனி ரெட்டிக்கு சின்னதம்பி சீரியலுக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் பாவனி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.விஜய் டிவியில் சின்னதம்பி சீரியல் “நந்தினி” கேரக்டரில் அதிகமான ரசிகர்களை நடிகை பாவனி ரெட்டி கவர்ந்திருந்தாலும் இவருக்கு இணையத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.
இணையத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி நடிகை ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டு இருந்தார். மருத்துவமனையிலிருந்து வந்த பாவனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை பாவனி. இவர் கடந்த பிக்பாஸ் சீசனில் முக்கிய பேட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அப்போது வயில்ட் கார்ட் என்றியில் வந்த அமிருடன் இவர் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக உள்ள நிலையில் பாவனி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி பின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பார்க்கும் போது பழைய பாவனி போல் இல்லை. மாறாக முகம் வீங்கிய நிலையில் மிகவும் கலைப்பாக இருப்பது போல் உள்ளார். பாவனியின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.