மயில்சாமியின் மருமகள்கள் இருவரும் விவாகரத்து கேட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அவரின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். மயில்சாமி வீட்டில் பயங்கர சண்டை நடந்து வருவதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விளக்கம் அளித்து பேசியுள்ளார். நடிகர் மயில்சாமி இறப்பு தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. இவருடைய நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். நகைச்சுவை மட்டும்மல்லாமல், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் மயில்சாமி மகாசிவராத்தியை முன்னிட்டு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பூஜையை முடித்து விட்டு வீடு திரும்பிய அவருக்கு அதிகாலை 4 மணியில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் பிறகு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமியின் இறப்பு ஒட்டுமொத்த நடிகர், நடிகைகளையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. விளக்கம் அளித்த மகன் இந்நிலையில், மயில்சாமியின் அன்பு, யுவன் என்ற இரு மகன்களின் மனைவிகளுக்குள் சண்டை ஏற்பட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து அன்பு பேசுகையில், அந்த மாதிரி எந்த பிரச்சினையும் இல்லை. சண்டையும் இல்லை. இதெல்லாம் கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக உள்ளது. வேறு வேலையே கிடையாதா? ஏன் இப்படி கேவலமாக இவர்கள் யோசிக்கிறார்கள் என்றார்.