நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ்,கன்னடா, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை ரெஜினா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மேலும் மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன.
இவர் 2005 ஆம் ஆண்டு ‘கண்ட நாள் முதல்’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் 2006 ஆம் ஆண்டு ‘அழகிய அசுரா’ எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப்படம் இல்லாததால் இனி அடுத்து வரும் படங்களை கவனம் செலுத்த தொடங்கினார். 2019 ‘சூர்யா காந்தி’ எனும் திரைப்படத்தின் முதன்முதலாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.சமீப காலமாக, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவை சேர்ந்த நடிகைகள்
பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகை ரெஜினாவும் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தான் ஒருநாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் அருகே தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது அருகில் வந்து உதட்டை பிடித்து கிள்ளினார்.. அந்த சம்பவம் தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்டு வர சிலநிமிடங்கள் ஆனதாகவும், அதன்பின்னர் அந்த இளைஞரை தனக்கு தெரிந்த ஆங்கிலம் மற்றும் தமிழ் கெட்டவார்த்தையால் திட்டியதாகவும் கூறினார். நான் கோபமாக திட்டுவதை தொடர்ந்து அங்கிருந்து வேகமாக அந்த இளைஞர் ஓடி விட்டார் எனவும் கூறியுள்ளார்.இதேபோல் அடுத்தடுத்து ஓரிரண்டு சம்பவங்கள் தனக்கு நிகழ்ந்ததாகவும், அந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை தான் கண்டித்தது மட்டுமின்றி அடித்ததாகவும் ரெஜினா கூறியுள்ளார்.