தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் வேலைகலை செய்து வரும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய ரசிகர் மன்ற இயக்கத்தின் நிர்வாகிகளை மூன்று நாட்கள் சந்தித்து பல விசயங்களை பேசி வருகிறார் விஜய். விஜய்யின் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் தொடர்பாக பல வேலைகளையும் செய்து வருகிறார். அதிலும் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று எங்கேயும் வெளிப்படுத்தவில்லை விஜய். ஆனால் விஜய்க்கு பின்புலமாக இருந்து வருபவர் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தான் என்று பிரபல விமர்சகர் கோடாங்கி தெரிவித்துள்ளார்.
அவர் தான் விஜய் எப்படி காய் நகர்த்தினால் என்னென்ன பலன் என்று பலவிதமான கருத்துக்களை ஆலோசனை கொடுத்து வருகிறாராம். விஜய் தன் ரசிகர்களை நிர்வாகிகளாக்கி இப்போதில் இருந்தே செதுக்கி வருகிறார். அதைவிட விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அரசியல் பற்றி விஜய்யிடம் யாரையும் பேசக்கூடாது என்று யாரையும் அனுமதிப்பதில்லையும்.
ஏன் அவரது குடும்பத்தினர் கூட அவரிடம் அரசியல் பற்றி பேசவிடவில்லையாம். மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்-ஆல் கூட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எதுவும் கேட்கமுடிவதில்லையாம். அந்த அளவிற்கு புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் விஜய்யின் நிலைபாட்டு கட்டுக்கோப்பாக இருந்து வருவதாக கோடாங்கி தெரிவித்துள்ளார்.