‘அங்காடித்தெரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிந்து. படங்களில் நடித்து வந்த அவர் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்து, மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
உடல்நிலை மோசமடைந்தமையைத் தொடர்ந்து சிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து பலரும் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து சிந்து தனது தாயின் கடைசி ஆசையையும் நிறைவேற்றி வந்துள்ளார்.
அதாவது சிந்துவின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது. மேலும் தனது தாய் சிந்துவின் ஆசைப்படி அக்னி தீர்த்தக்கடலில் அவரது மகள் தாயினுடைய அஸ்தியை கரைத்திருக்கின்றார்.அதுமட்டுமல்லாது இறந்த தாய் சிந்துவின் ஆன்மா சாந்தியடைவதற்கு தேவையான அனைத்துப் பரிகாரங்களையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.