பிரபல நடிகையின் படுக்கையறை காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த 2000 ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்ததால் படத்தில் நடிக்க தொடங்கினார் பிரியங்கா சோப்ரா. ஏராளமான விருதுகளை குவித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது. பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்திய மொழி சினிமாவில் அசத்தியதால் நாடு முழுவதும் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்த அவர், தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது கிறங்கவைக்கும் கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு ரகளை செய்து வருகிறார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் அவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, நடிகை பிரியங்கா சோப்ரா, The Sky Is Pink என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸானது. இதில், யாரும் எதிர்பாராத வகையில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் பிரியங்கா சோப்ரா. அப்போதே அந்த காட்சி பெரும் சர்ச்சையானது.திருமணம் ஆன பிறகும் இவர் ஏன் இப்படி நடிக்கிறார் என ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் அந்த படுக்கையறை காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.