இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், கிரிக்கெட்டை தாண்டி பிளேபாயாகவும் இருந்துள்ளார். 2011ல் உலக கோப்பை வெல்ல எப்படி மும்முரமாக இருந்தாரா, அதேபோல் பார்ட்டியில் பாலிவுட் நாயகிகளுடன் காதலிலும் இருந்துள்ளார். பாலிவுட் நடிகைகளுடன் டேட்டிங்கில் இருந்து ஊர் சுற்றியும் இருக்கிறார் யுவராஜ் சிங். அப்படி எத்தனை முறை காதலில் இருந்தார் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்.2005ல் நடிகை கிம் ஷர்மாவுட காதல் உறவில் இருந்த யுவராஜ் சிங் பல பார்ட்டிகளில் இருவரும் பங்கேற்று வந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
ஆனால் அவர்களின் காதல் 2 ஆண்டுகளில் முடிந்து 2007ல் பிரிந்துவிட்டார்கள்.அதே ஆண்டில் நடிகை தீபிகா படுகோனேவுடன் காதலில் இருந்த யுவராஜ் சிங், 2011 உலக கோப்பையின் போது தென்னாப்பிரிக்கா வரை சென்றார். பிறந்தநாள் பார்ட்டியை ஒருங்கிணைப்பது வரை சென்ற காதல் திடீரென நிறைவு பெற்றது. தமிழில் வெளியான தாஜ்மஹால் படத்தின் நாயகி ரியா சென்னை ஒரு பார்ட்டியில் சந்தித்து பின் டேட்டிங் செய்திருக்கிறார்.
தனியாக பார்ட்டிக்கு சென்று கைக்கோர்த்து சென்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் தோனியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ராய் லட்சுமியுடன் சில மாதமும் டேட் செய்தார். அதன்பின் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங், கடைசியில் பில்லா பட நடிகை ஹெசல் கிச்சை திருமணம் செய்து ஓரியன் என்ற மக்னை பெற்றெடுத்தார். தற்போது சர்ச்சையில் எதிலும் சிக்காமல் குடும்பத்தை பார்த்து வருகிறார்.