நடிகர் சிம்புவின் காதல், தோல்வியில் முடிவதற்கு அவரின் வாய் தான் காரணம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சினிமா வாழ்க்கை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன். இவர் அவரின் சிறு வயதிலேயே அவரின் அப்பாவுடன் இணைந்து நடிக்க வந்து விட்டார். அதில் அவர் நடித்த ,“எங்க வீட்டு வேலன்..” என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காலங்கள் செல்ல செல்ல இவரின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை பெற்றது. இந்த நிலையில் இவர் சினிமாவிற்கு வந்த பின்னர் இவருடன் இணைந்து நடிக்கும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனாலும் இவரின் சில காதல்கள் தோல்வியில் முடிவதற்கு இவரின் வாய் தான் காரணம் என சீக்ரட்டை திரை விமர்சகர் வித்தகன் சேகர் ஒரு பேட்டியில் கூறினார். நடிகையுடன் ஏற்பட்ட காதல் தோல்வி அந்த வகையில்,“ கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட நடிகையுடன் சிம்பு காதல் வயப்பட்டார். இவரின் காதல் திருமணம் வரை சென்றது, ஆனால் சிம்பு திருமணத்திற்கு
பின்னர் நடிக்க வேண்டாம் என்ற கூற்றை முன் வைத்தார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கு மேல் இவருடன் செட்டாகாது என்று சிம்பு தான் விலகி சென்றார். இந்த காதல் குறித்த நடிகையை பலமாக பாதித்துள்ளது என அவரும் சமீபத்தில் ஒரு இடத்தில் கூறியுள்ளார்.” என கூறினார். இந்த செய்தியை பார்த்த சிம்புவின் ரசிகர்கள்,“ இவரின் காதலுக்கு இவரின் வாய் தாண்டா எதிரி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.