தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை கௌரி கிஷன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழியில் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என இரு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நமது நடிகை தற்சமயம் மகிழினி ஆல்பம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் கௌரி க் கிஷன் உடன் நடிகை அனகாவும் இணைந்து நடித்து வருகிறார். வகையில் நடிகை அனகா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் கண்களில் தென்பட ஆரம்பித்தார். அந்தவகையில் கௌரி கிஷன் மற்றும் அனகா இருவரும் இணைந்து இதுவரை எந்த ஒரு நடிகையும் முயற்சிக்காதே ஓரினச்சேர்க்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை விஜி பாலசுப்ரமணியம் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ட்ரென்டிங் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்து வருகிறார்கள் இந்நிலையில் மகிழ்வினை படத்தின் இசை ஆர்வத்தை சமீபத்தில் சரிகமா ஒரிஜினல் வெளியிட்டுள்ளார்கள்.அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இயக்குனரான பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்த திரைப்படத்தின் மூலமாக ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி பல்வேறு விஷயங்களை
இந்த சமுதாயத்திற்கு புரிய வைக்கப் போவதாக கூறி உள்ளார்.அந்த வகையில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிருஷ்ணன் நடிப்பது மட்டுமின்றி டெல்லியிலிருந்து வரும் இந்துஜா என்ற கதாபாத்திரத்தில் அனகா நடிக்க உள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே பரதநாட்டியத்தின் மீது அதிக பற்று கொண்டவர் களாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.அந்தவகையில் இருவரும் பரதநாட்டியத்திற்கு ஒத்திகை பார்க்கும் பொழுது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர் இந்த காதலுக்கு பிறகாக இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை ஆகும்.