சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்தும் தற்போது அவர் பேசி வருவதை பலர் கண்டித்து வருகிறார்கள். அதைமீறியும் பல விசயங்களை கூறி வருகிறார் பயில்வான். ஷர்மிலி சமீபத்தில் நடிகை ஷர்மிலியின் வாழ்க்கையை பற்றி கண்டமேனிக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஷர்மிலி சமீபத்தில் அளித்த பேட்டியில் என் வாழ்க்கையை கெடுத்ததே கவுண்டமணி தான் என்று கூறியதை அடுத்து பயில்வான் ஷர்மிலியின் சுயரூப்த்தை கிழித்தெரிந்துள்ளார். பயில்வான் அதில், ஷர்மிலி என்று சொன்னால் கவர்ச்சி நடிகை ஷர்னிலி என்று எல்லா ஊரிலும் சொல்லுவாங்க, அதற்கு ஒரே காரணம் கவுண்டமணி தான். எனக்கு தெரியும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
தர்மதுறை படத்தில் ஷர்மிலி டான்ஸ் குரூப்புடன் நடனமாடுவார். அதன்பின் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு முன் யாருன்னே தெரியாத ஷர்மிலி, கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தப்பின் தான் பிரபலமானார். அவருக்கு சம்பளமும் ஏறியது பிளாட்டும் வாங்கி கொடுத்தார் கவுண்டமணி. ஒரு குரூப் டான்சருக்கு ஒரு நாள் சம்பளம் 1500 ரூபாய், ஆனால் ஷர்மிலிக்கு ஒருநாள் சம்பளம் 50 ஆயிரம் வாங்கி கொடுத்துள்ளார். எல்லா படத்திலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் ஷர்மிலியை போட்டுக்கோங்கப்பா என்று கூறுவார், அது எனக்கும் ஷர்மிலிக்கும் தெரியும். அந்த சமயம், கவுண்டமணி கால்ஷீட் கொடுத்திருப்பார் அவரும் நடித்து வருவார்.
கவுண்டமணியால் புகழ் பெற்ற ஷர்மிலிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்த போது ஷர்மிலியை போகக்கூடாதுன்னு என்னுடன் தான் நடிக்கனும்னு சொன்னார். நீ சோலா ஆடுனாலும் அதைவிட சம்பளம் வாங்கி கொடுத்தாரு, எத்தன படத்துல லட்சம் லட்சமா வாங்குனீங்க, பிளாட் வாங்குனீங்க வெளிநாட்டுக்கு போனீங்க. திருமணம் ரகசியம் ஏன், நிறைய பேருக்கு தெரியாத ஒரு விசயம் ஷர்மிலிக்கே தெரியும். ஷர்மிலி ஒருவரை நிச்சயம் செய்து திருமணம் செய்து வெளிநாட்டில் வாழ்ந்தார். 2 வருடம் ஒப்பந்தம் செய்து வாழ்ந்தப்பின் இங்கே வந்துவிட்டார்.
என்னிடம் மனசுவிட்டு பேசியிருக்கிறார் ஷர்மிலி. நான் கவுண்டமணிக்கு நன்றி உள்ளவன். இப்போ திடீர்ன்னு ஷர்மிலி என்ன சொல்லி இருக்கு, “என் வாழ்க்கையை கெடுத்தது கவுண்டமணி தான்”, ஏம்மா எவ்வளவு பெரிய பொய் அந்த ஆண்டவன் மன்னிக்க மாட்டார். ஷர்மிலி ஒரு இஸ்லாமிய பெண். நன்றி கெட்டவருக்கு மன்னிப்பு கிடையாதுன்னு அல்லாவே சொல்லி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கீங்க, வாழ்த்துக்கள். தயவு செய்து கவுண்டமணியை அந்த மாதிரி என் வாழ்க்கையை கெடுத்தவர்ன்னு சொன்னதற்கு மறுப்பு தெரிவிங்க என்று கூறியிருக்கிறார் பயில்வான். இது சத்தியமான ஒரு பதிவு என்றும் தெரிவித்துள்ளார்.