மலையாள சினிமாவில் ஃபைலட் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.அதன்பின் தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, மகாநதி போன்ற படங்களில் நடித்து பிஸியான நடிகையாகினார்.
அதன்பின் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், மகேஷ்பாபு, நானி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடாமல் படவாய்ப்பினை இழந்து வந்தார். குடும்ப பாங்கான நடிகையாக இருந்து தற்போது கிளாமர் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் வாய்ப்பிளக்கும்படியான போட்டோஷூட் எடுத்து வருகிறார்.தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும்
கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நிகழ்ச்சியில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை பார்த்து அப்படியே செய்திருக்கிறார். குடித்துவிட்டு பாட்டிலை போட்டுள்ள கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#KeerthiSuresh Massss 🔥🔥 #DasaraOnMarch30th pic.twitter.com/OsWlJiS6A5
— Think!! (@27stories_) March 22, 2023