தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் 2017 -ம் ஆண்டு வெளியான அருஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது இவர் சமந்தாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.இப்படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணஇயக்குகிறார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஷி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது.
இதனால் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால் விவாகரத்து பின் சமந்தா, விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும்,
அனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு தான் பெண் எதுவும் கிடைக்கவில்லை என்று பேட்டியில் பயில்வான் கூறியுள்ளார். இந்நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து வீடீயோக்களை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா கட்டிப்பிடித்திருப்பார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.