விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் பிடிக்கும். அதுவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு கன்டஸ்டன்ட்களுக்கும் ஒரு விதமாக ரசிகர்கள் பட்டாளம் குவிந்திருக்கின்றன. அதில் பல பேர் இருந்தாலும் அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்து இழுத்ததில் அஸ்வினும் ஒருவர். இவருடைய சிம்பிளிசிட்டி இதுதான் இவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.எப்போதும் சிரித்துக்கொண்டு க்யூட்டாக வரும் அஸ்வினுக்கு ஏராளமான ரசிகைகள். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர்.
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்க தெரியாதவர்கள் கூட சிரித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு கலகலப்பான இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் மிகவும் வித்தியாசமான
உணவுகளை சமைத்து அதிக பாராட்டுக்கள் பெற்றவர் அஸ்வின். இவர் அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய பாடல்கள், சில படங்கள் நடித்து வருகிறார்.‘ திருமணம் இப்போது என்னவென்றால் நடிகர் அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.