விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக நிகழ்ந்துள்ள நிலையில் தொடர்ந்து சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே மாகாபா ஆனந்த் உட்பட சிலரின் பெயர்கள் வெளியாகி இருந்த நிலையில்
தற்போது திருநங்கை போட்டியாளராக ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் இந்த சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரது வளர்ப்பு திருநங்கை மகளான மிலா வெளியில் தெரியவந்தார்.
சிறு வயதிலேயே அவரை தத்தெடுத்த ஷகிலா, தொடர்ந்து தன்னுடன் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ஷகிலாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவர் தான் தனது திருநங்கை மகளை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து மற்றும் ஷிவின் கணேசன் என இரண்டு திருநங்கை போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.