நடிகை பாவனாவுக்கு நடந்த கோரசம்பவத்தால், சொல்ல முடியாத பல வலிகளை அனுபவித்தார் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை பாவனா. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் 2006 -ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பாவனா. இவர் 2017 -ம் ஆண்டு கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து காருக்குள் புகுந்து அவரிடம் அத்து மீறி நடந்து கொண்டார்கள்.
இந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சி அடையவைத்தது. இதற்கு காரணமாக பின்னணியில் இருந்தது நடிகர் திலீப் என்று விசாரணையில் தகவல் வெளியானது. இது குறித்து நேர்காணலில் பேசிய பாவனா “நான் எத்தனையோ இரவுகளில் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறேன். ஆனால் அந்தக்காருக்குள் எனக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் உலுக்கிவிட்டது”. “அதிலிருந்து நான் வெளியே வருவதற்கு பல நாட்கள் ஆயிற்று. எனக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறொரு எந்த பெண்ணுக்கு நடந்திருந்தால்
அந்த பெண் நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளும்” என்று கூறியிருந்தார். இந்த பிரச்சனையால் பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்து வந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் எனப் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். தற்போது அந்த வேதனையில் இருந்து மீண்டு வந்த பாவனா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.