சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். கவர்ச்சிக்கு நோ சொல்லி தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழ் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.ஹீரோ யார் என பெயர் சொல்லாமல் தமிழ் திரையுலகில் ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் இண்டஸ்ட்ரியில் நான் பல சிக்கல்களை சந்தித்துள்ளேன்.
ஆனால் டோலிவுட்டில் நான் இப்படி எந்த ஒரு பிரச்சனையும் சந்தித்ததில்லை என தெரிவித்துள்ளார். நடிகை நித்யா மேனன், விஜய் சேதுபதி நடித்திருக்கும் 19(1)a படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இதை முன்னிட்டு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்க நித்யா மேனன் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் தன்னை 6 வருடமாக ஒரு இளைஞர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “சந்தோஷ் வர்க்கி சொல்வதை கேட்பவர்கள் ஒரு முட்டாள். என்னை அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு 6 வருடங்களாக தொல்லை செய்து வருகிறார். அவர் எனக்கு இதுவரை 30 க்கும் மேற்பட்ட மொபைல் நம்பர்களிலிருந்து போன் செய்து டார்ச்சர் செய்து இருக்கிறார். நான் எனது அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு நம்பரை பிளாக் செய்து விடுங்கள் என கூறினேன். அவரது முகம் சமூக வலைதளங்களில் நன்கு தெரிந்துவிட்டதால் அதைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அவர் மேல் நான் புகார் கொடுக்கவில்லை. மன்னித்துவிட்டேன்” என்றார். இதற்கு பதிலளிடி கொடுக்கும் விதமாக, “நான் . ஒரு அடையாள அட்டை வைத்து கொண்டு ஒருவர் எப்படி அத்தனை சிம் கார்டு வாங்க முடியும்? அது மட்டுமில்லாமல் நித்யா மேனனின் தாயார் அவருக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்துவிட்டதாக சொன்னார். ஆனால் அவர் தந்தை, இன்னும் வரன் எதுவும் பார்க்கவில்லை என சொன்னார். நித்யா மேனன் என் மேல்
பாலியல் புகார் கொடுக்க போவதாக தகவல் கிடைத்தது. நான் எந்த விஷயங்களிலும் தலையிடாமல் என் வேலையை மட்டும் செய்கிறேன்.அவருக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கிறதுன என தெரிந்து இருந்தால் அவர் பின்னால் காதலித்து சுற்றி திரிந்து இருக்க மாட்டேன்” எ கூறினார். நித்யா மேனனின் இந்த பேட்டியால் யார் அந்த தமிழ் நடிகர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.