பாபா படத்தினால் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையே போய்விட்டதாக மனிஷா கொய்ராலா தற்போது அதிரடி கருத்தை கூறியிருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு உருவான பம்பாய் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. இந்த படத்தில் வரும் உயிரே உயிரே பாடல் இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. பின்னர் இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். முதல்வன் படத்தில் வரும் குறுக்கு சிறுத்தவளே, உப்பு கருவாடு போன்ற பாடல்கள் மனிஷா கொய்ராலாவின் நடிப்பிற்கு மற்றொரு மணி மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
திரைத்துறையில் கொடி கட்டி பறந்த அவருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவை அவர் மொட்டை தலையுடன் மருத்துவம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது தனது குடும்பத்துடன் வசித்து வரும் அவர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ஏதாவது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.்நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுசுடன் இணைந்து மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, நேபாளம் ஆகிய பல மொழிகளில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மனிஷா கொய்ராலா தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது அவர் பேசியது தனக்கு தமிழில் பாபா திரைப்படம் தான் கடைசியாக வெளியான பெரிய படம். அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் தோல்வி அடைந்ததால் தென்னிந்தியாவில் தன்னுடைய கெரியர் முடிந்தது என நினைத்தேன். நான் நினைத்தது போலவே நடந்து விட்டது. பாபா படத்திற்கு முன்பு நிறைய தென்னிந்திய படங்களில் நடித்திருந்தேன்.ஆனால் பாபா படம் தோல்வி அடைந்ததால் எனக்கு வாய்ப்புகள்
வருவது நின்று விட்டது என்று அவர் பேசியிருந்தார். இந்த காணொளியை இணையத்தில் தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் கூட பாபா திரைப்படம் புது பொலிவு பெற்று வெளியாகி இருந்தது. பலரும் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை சென்று பார்த்து வந்தனர். கிளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்களுடன் இந்த படம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு புதுமையாக வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மனிஷா கொய்ராலா இது போல் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.