விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இந்த சீரியல் தற்பொழுது ஹிந்தியிலும் ரீமெக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் காதல், திருமணம், சண்டை என அனைத்து காட்சிகளும் ரசிகர்களை ஈர்த்தது. ஆனால் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா தீடீரென்று மாற்றப்பட்டார்.இதற்கிடையில், சீரியலில் ஜோடியாக நடித்த தீபிகாவும் சரவணவ விக்ரமும் சமூக வலைதளங்களில் ஜோடியாக வலம் வந்த வண்ணம் இருந்தனர்.
ஆல்பம், குறும்படங்கள், ஃபோட்டோஷூட் என இணையத்தை ஈர்த்தனர்.தற்போது மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மீண்டும் வி.ஜே.தீபிகா கண்ணனின் மனைவியாக கலக்கி வருகிறார். இவர்களின் நெருக்கத்தை பார்த்த ரசிகர்களிடையே காதலிக்கிறார்களா என கேள்வி எழுந்தது. இந்த தொடரில் கண்ணன்-ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மற்றும் தீபிகா ஜோடியாக நடிக்கிறார்கள்.இவர்கள் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் பேசினாலும் இதுவரை அவர்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தனர்.இந்த நிலையில் தான் நடிகை தீபிகா, சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
அதுதான் டீல் மை டியர் என பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இருவரும் காதலிக்கின்றீர்களா எனக் கேட்டு வருகின்றனர்.மேலும் இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பதோடு இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தீபிகா சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, “நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டீல் மை டியர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக இருவரும் வெளிப்படையாக இதுவரை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.