பாக்கியராஜனின் மருமகள் வீட்டிற்கு தெரியாமல் ஒரு குழந்தையை வளர்த்து வருகின்றார் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்களை இயக்கி வெற்றி பெரும் நடிகர்களில் தமிழ் சினிமாவில் இருந்தவர் பாக்யராஜ். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார். பாக்யராஜ் தன் படத்தில் நடித்த நடிகையான பிரவீனாவை 1981ல் காதலித்து திருமணம்செய்து கொண்டார். 2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரவீனா 1983ல் மஞ்சள் காமாலையால் இறந்துள்ளார்.இதையடுத்து, அடுத்த ஆண்டே நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது முதல் மனைவி பிரவினாவை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 90 கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த நடிகர் தான் பாக்கியராஜ். இவரை தொடர்ந்து இவரின் மகனும் சினிமாவிற்குள் வந்து விட்டார். ஆனாலும் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நினைத்தளவு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் நடிகர் சாந்தனு தனது சின்ன வயதில் டான்ஸ் கற்றுக்கொடுத்த ஜெயந்தி மாஸ்டரின் மகள் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இரகசியமாக குழந்தை வளர்ப்பு கீர்த்தி பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கீர்த்தி கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து இரகசியமாக அனாதை இல்லத்தில் வைத்து வளர்த்து வருகிறாராம். குறித்த செய்தி ஒரு சாந்தனு காதிற்கு செல்ல அவரும் ஆதரவு தருவதாக கூறியுள்ளாராம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ கீர்த்தியின் நல்ல மனசிற்கு எல்லாம் நல்லதாக நடக்கும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.