தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து நடிகை வடிவுக்கரசி மனம் திறந்துள்ளார். நடிகை வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்திற்காக 30 நாள் சூட்டிங்க்கு திருச்சிக்கு சென்றிருந்தேன். அப்போ எனக்கு டயலாக் எல்லாமே பாக்யராஜ் தான் சொல்லிக் கொடுத்திருந்தார். அப்போது பிரவீனாவிற்கும் பாக்யராஜுக்கும் காதல் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் என்னை பார்க்க வருவது போல் பாக்கியராஜ் பிரவீனாவை பார்ப்பார். பாக்யராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே நான் பிரவீனாவிற்கு சொல்லிவிடும் வேலையைத்தான் செய்து வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மட்டும் அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்புவார்கள்.அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற போது பிரவீனா பற்றி பேசிக்கொண்டே வருவார். இதை சிலர் ராஜ்கிரண் சாருக்கு கால் செய்து வடிவுக்கரசியும் பாக்யராஜூவும் காதலிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.
ஒரு நாள் நைட் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜ்கிரண், “இங்க அவா அவா என் காசுல ஹனிமூன் கொண்டாடுகிறார்கள்” என்று கோபத்தில் சொல்ல, அதைக்கேட்டு கோபமான நான் உடனே அங்கிருந்து சேரை எடுத்து தூக்கி வீசி கத்தியதால் அப்போதைய செய்திகளில் வடிவுக்கரசிக்கு பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.