பரிதாபமாக உயிரிழந்த நடிகை… இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சஞ்சீவின் அக்கா மகள்..சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது.விஜயுடனான நட்பே சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார்.2009ல் நடிகையான பிரீத்தி ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் சஞ்சீவ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.பந்தம் சீரியல் மூலம் அறிமுகமான பிரீத்தியை காதல் திருமண செய்து கொண்டார் சன்சீவ். இவர்களுக்கு ஆதவ் என்னும் மகனும், லயா என்னும் மகளும் உள்ளனர்.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலக்கி வருகிறார்.
இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அவரது பெயர் சிந்து, ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் சின்னத்திரைக்கு திரும்பினார் சிந்து. சிந்துவுக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்கள் இருந்துள்ளது.பிறகு நுரையீரல் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் வர
33 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.சிந்து இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஸ்ரேயா என்னும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வந்துள்ளார். பின்னர் ஸ்ரேயாவுக்கும் அஸ்வின் ராம் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.சஞ்சீவின் அக்கா மகள் ஸ்ரேயாவின் கணவர் அஸ்வின் ராம் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தை இயக்கியுள்ளார். இந்த டீம் சமீபத்தில் பிக் பாஸ் 5 போட்டியாளர்களை சந்தித்தனர்.