தமிழில் 2010ல் வெளியான சிந்து +2 படத்தின் மூலம் முக்கிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாந்தினி தமிழரசன். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு பக்கம் திரும்பினார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி உள்ளிட்ட பல படங்களில் சிறு ரோல்களில் நடித்து வந்தார்.இவர், 2009ம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய போது அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற கே.பாக்யராஜ் நடிகை சாந்தினிக்கு தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பினை அளித்து வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் வசனம் எழுதிய 2013 ஆம் ஆண்டு பிருத்வி ராஜ்குமாரின் ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்திருந்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் நடன இயக்குனர் மற்றும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் நடித்து இருந்தார் .சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி அவ்வப்போது படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வார்.
கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சின்னத்திரை சீரியல்களான தாலம்பூ, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது 30 வயதாகும் சாந்தினி 2018ல் நந்தா என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பும் நடித்து வந்த சாந்தினி தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் சட்டை மற்றும் பேண்ட் பட்டனை கழட்டி எல்லைமீறி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.