ஆந்திராவை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். அதற்கு முன்பு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.துவக்கத்தில் கிடைத்த வேடங்களில் நடித்தார். காக்கா முட்டை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இரண்டு சிறுவர்களுக்கு தாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
மெல்ல மெல்ல மற்ற நடிகர்களுடனும் நடிக்க துவங்கினார். அதேநேரம், முன்னணி நடிகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.எனவே, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். துவக்கத்தில் சில படங்கள் வரவேற்பை பெற்றது.ஆனால், சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்து வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் முடிவை அவர் கைவிட்டதாக தெரிகிறது.
ஆனாலும், விஜய் சேதுபதியை தவிர வேறு முன்னணி ஹீரோக்கள் அவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பவில்லை. இதைத்தொடர்ந்து நான் கொஞ்சம் கவர்ச்சி காட்டவும் ரெடி என சொல்ல துவங்கியுள்ளார்.கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.