நடிகை ஷாலு ஷம்மு கார் வாங்கியது குறித்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தொடர்ந்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களின் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.இந்நிலையில், புதிய ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஷோ ரூமில் ஜாகுவார் கார் எடுக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு கேப்ஷனாக Don’t Dream, Just Drive It. எனக் குறிப்பிட்டுள்ளார். ஜாகுவார் கார் 2018ல் வெளியான பயன்படுத்திய ஜாகுவார் காரை 45 லட்சம் ரூபாய்க்கு செகனண்ட் ஆக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினிமா பட வாய்ப்புகள் இல்லாத இவருக்கு எப்படி இவ்வளவு விலையில் கார் வாங்க முடியும்?
என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சுஹா (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக உள்ளார். சினிமா பிரபலங்களின் ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.