தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களாக உயர்ந்தவர்கள். அந்தவகையில் சின்னத்திரையில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களாக உயர்ந்தவர்கள். அந்தவகையில் சின்னத்திரையில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் அறிமுகமானார். சிறு கதாபாத்திரத்தில் தலையை காட்டிய ஐஸ்வர்யாவுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து. பின்னர் அதே ஆண்டு ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடந்து மீண்டும் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடித்திருப்பார்.தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், படம் சொல்லும் அளவிற்கு வெற்றி ரீச் ஆகவில்லை, இதனால் தமிழ் சினிமாவில் இருந்து சிறு கேப் கொடுத்துவிட்டு கன்னடம், மலையாளம் மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.பின்னர் மீண்டு தமிழிற்கு வந்த ஐஸ்வர்யாவுக்கு வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக கலக்கினார். ரசிகர்கள் மத்தியில் ஐஸ்வர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், படத்தில் “எதோ மிஸ் ஆகுதே” என்று சொல்வது போல் சுமாரான வெற்றியையே கொடுத்து வந்தார். இருந்தபோதிலும் தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஐஸ்வர்யா தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா, அதிக பட வாய்ப்புகளை பெற ஏகப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கஒடுக்கமாக போட்டோஷூட் செய்த ஐஸ்வர்யா, பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் செய்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.