தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி சினிமாத்துறையில் பல வேலைகளை செய்து வந்தவர் நடிகர் மாரிமுத்து.எதிர்நீச்சல் சீரியல் மூலம், பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி உள்ள நடிகர் மாரிமுத்து.. ஆரம்பத்தில் 1500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திரை உலகில் சாதிக்க துடிக்கும் அனைவருமே எடுத்த எடுப்பில் தங்களின் வெற்றி இலக்கை அடைந்து விடுவதில்லை. இதற்கு மிகப் பெரிய உதாரணமாக பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் விடாமுயற்சி, உழைப்பு போன்றவை…
என்றோ ஒருநாள் அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும். அப்படி 33 வருட விடாமுயற்சிக்கு பின்னர், இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் தனக்கென தனி அடையாளம் பதித்துள்ளார் மாரிமுத்து. அஜித்தின் நெருங்கிய நண்பராக விளங்கி பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய மாரிமுத்து, தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனராக தன்னால் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த மாரிமுத்துவை, இயக்குனர் மிஷ்கின் அவர் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். புதுவிதமான வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அனைவரையும் கவர்ந்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க ஒரு மாத்திற்கு 75 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம். டாப் நடிகைகளுக்கு கூட சீரியலில் இப்படியொரு சம்பளத்தை பெறாத நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்திற்காக மாரிமுத்து இத்தனை லட்சத்தில் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த கதாபாத்திரம் தான் சீரியலை இந்த அளவிற்கு பிரபலப்படுத்தி இருப்பதாகவும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.