படப்பிடிப்பு தளத்தில் விஜய் என்னிடம் கூறிய வார்த்தை…! ஒரு நிமிஷம் பேச்சே வரல…! பிரியங்கா மோகன்…!

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் தன்னிடம் பேசிய விஷயங்கள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகன் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும், டான் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் தான் நடைபெற்றது. அருகருகில் இருந்த செட்டில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நடிகர் விஜயை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய திரைப்படத்தில் என்னுடைய பாடல்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.

டாக்டர் திரைப்படத்தில் என் நடிப்பு மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது என்று கூறினார். மட்டுமில்லாமல் தெலுங்கில் ஸ்ரீகாரம் என்ற ஒரு திரைப்படத்தில் நான் நடித்திருந்தேன்.அந்த படத்தில் ஹே அப்பாயி.. என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலை குறிப்பிட்டு இந்த பாடலில் நீங்கள் சிறப்பாக நடனம் ஆடி இருந்தீர்கள். அந்த பாடல் நன்றாக இருந்தது.அடிக்கடி அந்த பாடலை நான் கேட்பேன் என்று கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

சார் என்னுடைய அந்த பாடல்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? என்று கேட்டேன்..! அடிக்கடி பார்ப்பேன் என்று கூறினார். எனக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. அதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் பற்றி கேட்டார் பேசினோம் என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். நடிகர் விஜய் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல் என்று கூறிய அந்த பாடல் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *