“நான் நல்ல நடிகை இல்ல…!” திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்கள் குறித்து மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்…!

ரம்யா கிருஷ்ணன், தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க போராடினார்.தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். மோசமான நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படையப்பா என்றால் ரஜினிக்கு அடுத்து நீலாம்பரி கேரக்டர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதே போல் மற்றும் பாகுபலியில் ராஜமாதாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.

இருப்பினும், ரம்யா கிருஷ்ணன் நடிக்க தொடங்கிய உடனே இந்த அங்கீகாரத்தை பெறவில்லை. தனது தி ரை வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க போராடினார். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், தமிழில் பணிபுரிந்த பிறகு தெலுங்கு திரையுலகிற்கு ஏன் சென்றார் என்பதை தெரிவித்தார். அப்போது தான் ஒரு சிறந்த நடிகை இல்லை என்று தான் உணர்ந்ததாகவும் ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் “ நான் அறிமுகமான பிறகு நீண்ட நாட்களாக எனது நடிப்பு வாழ்க்கையில் வெற்றிபெறவில்லை.

தமிழில் நான் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினேன். முதல் வசந்தம் ஹிட் அடித்தாலும் அது என் கேரியருக்கு பலன் தரவில்லை. அப்போது நான் ஒரு நல்ல நடிகையாக இல்லை. என்னுடைய ஒரு படத்தைப் பார்த்த என் அம்மா, நான் இவ்வளவு காலம் திரைத்துறையில் தாக்குப்பிடித்தேன் என்று கேட்டார்.” என்று தெரிவித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, 1989ல் தெலுங்கில் வெளியான கே. விஸ்வநாத்தின் சூத்ரதருலு என்ற படத்தின் மூலம் ரம்யா கிருஷ்ணன் புகழ் பெற்றார்.

தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. இதற்குப் பிறகு, அவர் ரம்யா படங்களில் நடித்தார் மற்றும் பல பிரபல தென்னிந்திய நடிகைகளுடன் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்ததால் இந்த ஜோடியைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால் ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் ஜெயிலர் படம் பல சாதனைகளை முறியடித்துள்ளது. ஜெயிலர் பாம் இதுவரை 500 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருவதால் இப்படத்தின் வசூல் 600 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *