நடிகை ரோஜா ஆந்திராவில் அரசியலில் கலக்கி வருகிறார். ஆனால் இவர் அரசியலில் நுழைந்த நாள் முதல் இவருக்கு எதிராக நிற்கும் கட்சிகள் மோசமான ஒரு விஷயத்தை இவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுதான் இவர் ஆடையின்றி நடித்த காட்சிகள் என்று கூறப்படும் வேறு ஒரு நடிகையின் வீடியோ காட்சி. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி தற்போது அமைச்சராக இருக்கும் ரோஜா குறித்து படுமோசமான இழிவான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருக்கும் நடிகை ரோஜா திருப்பதியில் உள்ள அவருடைய வீட்டில் கண்ணீர் மல்க ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்.அவர் அதில் கூறியிருப்பதாவது, நான் ஆபாச படத்தில் நடித்தாத கூறி சித்தரவதை செய்கிறார்கள். சட்டசபையில் இந்த CD-கள் காட்டப்பட்டன. ஆனால், அந்த CDயில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. என்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நடிகையின் வீடியோவை கொண்டு வந்து நான் தான் இப்படி நடித்திருக்கிறேன் என்று எனக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள்.
பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. என் குணத்தையும் என் நடத்தையும் மதிப்பிட நீங்கள் யார்..? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை ஒரு விளையாட்டு பொருளாகவும் கேளிக்கை பொருளாகவும் பார்க்கிறது என்று கண்ணீர் விட்டு அழுத்தியிருக்கிறார் நடிகை ரோஜா. இப்படி உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களை பேசினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..? ஒரு நடிகை என்பதால் இப்படியான மோசமான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு
பதில் கொடுத்துக் கொண்டிருக்கிற வேண்டுமா..?முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீநிவாஸ், அய்யனபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இந்த விவகாரத்தை கண்டிக்காதது ஏன்..? தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகர்களால் நிறுவுப்பட்ட கட்சி என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.பண்டாரூ சத்யநாராயணன் பேச்சுக்கு அவருடைய மனைவி தன்னுடைய கணவரை அழைத்து அறைந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தை லோகேஷ் வெட்கமின்றி ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்..? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்.
என்னை அயன் லெக் என்று கேலி செய்தார்கள். என் மீது இப்படி போலியான கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பவர்கள் மீது நான் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கிறேன் என்று ரோஜா பேசியுள்ள வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. ஆந்திராவில் ஒரு பெண்.. அதுவும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ஒரு பெண்.. கலங்கி அழுதபடி வீடியோ வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த ஆந்திராவையும் கலங்க வைத்திருக்கிறது. இந்நிலையில், ரோஜா குறித்து அவதூறு பேசியதாக கூறி பண்டாரா சத்ய நாராயணா மூர்த்தியை அதிரடியாக கைது செய்து வழக்கும் பதிவு செய்திருக்கிறது காவல்துறை.
நடிகை ரோஜாவின் மீதான இந்த புகார் இன்று நேற்று வரவில்லை. இவர் அரசியலில் நுழைந்த நாள் முதல் இந்த விவகாரம் தான் வந்து கொண்டிருக்கிறது. 90களில் வைரலான அந்த வீடியோவில் இருப்பது நடிகை ரோஜாவே கிடையாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ரோஜா போலவே முக அமைப்பும் உடல்வாகும் கொண்ட ஒரு பெண்ணை ரோஜா என்று திரித்துவிட்டு அரசியலில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் ரோஜா மீது இப்படி போலியான புகார்களை போலியான குற்றச்சாட்டுகளை மனதை நோக்கடிப்பது போன்ற விஷயங்களை செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.