யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய பார்த்திபன் இப்படத்தில் ஒரு நிர்வாண காட்சி இருப்பதாக கூறியிருந்தார். தற்போது இது பற்றி பவி டீச்சர் ஓபனாக பேசியுள்ளார்.
முதலில் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய பவி டீச்சர் சென்றுள்ளார். ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்தில் கிட்டத்தட்ட 19 நொடிகள் பவி டீச்சர் ஆடை இன்றி நடித்துள்ளார். இதுகுறித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.அப்போது பேசிய பவி டீச்சர் நான் புடவை அணியும் போதே சரியாக இருக்கிறதா என பலமுறை பார்க்கக்கூடிய சராசரி பெண்தான். ஆனால் இந்த படத்தில் ஆடையின்றி நடிக்க சொன்னபோது எனக்கும் பயமாகத்தான் இருந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரம் எவ்வளவு புனிதமானது என்பதை பார்த்திபன் சார் புரிய வைத்தார்.
அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார்.ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அவரின் பிரபலமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.