விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஜீம், விக்ரமன் இருக்கும் கட்சியின் தன்னுடைய தாயின் உடன்பிறந்த சகோதரர் எம்.எல்.ஏவாக இருப்பதாக பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தைரியமாக முன்வைப்பதால் விக்ரமனுக்கு பல ஆதரவு கிடைத்து ரன்னர் பட்டம் வென்றார். இருப்பினும் சிலர் இவரை பூமர் விக்ரமன் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் மீது பரபரப்பு புகார் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி என்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச்,
ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார். மேலும் விக்ரமன், தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு, அந்த பெண்ணுடன் உருவில் இருந்தார். இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரியவந்தது. விக்ரமன் இது மட்டுமின்றி 15 மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்தது எனக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளார். கிருபா முனுசாமி , விக்ரம் உடன் பேசிய மற்றும் அவருடன் எடுத்த கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.