தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா பற்றிய ஒரு ரகசியத்தை பிரபல நடிகர் ஆர்யா ஒப்பன் செய்துள்ளார். நயன் தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் ஜோடியாக நடித்த ஆர்யா, அப்போது இருவரும் லிவ்விங் வாழ்க்கை வாழ்வதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.மிகவும் துணிச்சலான ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி நடிக்கும்
நயன்தாரா தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு நடிப்பில் முத்திரை பதித்தார். சினிமா பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளை தாண்டி சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வந்தார். இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 8 ஆண்டுகள் காதலித்து பின்னர் பிரமாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார்.இவர்கள் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா காதர் பாட்சா முத்துராமலிங்கம்படத்தின் விழாவில் நயன்தாரா குறித்து பேசியபோது. நயன்தாரா மிகச்சிறந்த நடிகை. அவருடன் லாங் ட்ரைவ் போகவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், அவருடன் போனால் கார் நான் தான் ஓட்டவேண்டியிருக்கும். ஆம், நயன்தாராவுக்கு கார் ஒட்டவே தெரியாது என கூறி சிரித்தார். இதை கேட்ட நயன் ரசிகர்கள், என்னது நயன்தாராவுக்கு கார் கூட ஓட்ட தெரியாதா? என செம ஷாக்கிவிட்டனர். இந்நிலையில், சமீபத்தில் நடித்து காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது யாருடன் நெடுந்தூரம் கார் டிரைவ் செல்ல விரும்பம் என்ற கேள்விக்கு, நடிகை நயன் தாராவுடன் செல்ல வேண்டும் என்றும் ஆர்யா கூறியுள்ளார். அதற்கு காரணம், நயன் தாராவுடன் டிரைவ் போனால் நாம் தான் காரை ஓட்டவேண்டும். அவருக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறியுள்ளார். அப்போ பல படங்களில் கார் ஓட்டுவது போல் நடித்துள்ளதாகவும் அதை பல ஆண்டுகள் கழித்து ரகசியத்தை ஆர்யா உடைத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் கிண்டலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.