நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுக்கு நான் தான் தாய்மாமன் என காமெடி நடிகர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.இந்நிலையில், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமாகி பல ரசிகர்களை அமைத்துக் கொண்டு அடுத்து பல படங்களில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் அண்மையில் கொடுத்த நேர்காணலில் நடிகை நயன்தாரா குறித்து பேசி இருக்கிறார். அதில் நயன்தாராவை தனக்கு வல்லவன் படத்தில் இருந்து தெரியும் அதற்கு பிறகு நிறைய படங்களை இணைந்து நடித்திருக்கிறோம்.
நயன்தாரா எப்போதும் என்னை அண்ணா என்றுதான் சொல்லுவார் நானும் அவரை என் தங்கைச்சி என்று தான் சொல்லுவேன். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு போய் விருந்து எல்லாம் சாப்பிட்டேன்.குழந்தைகளை காட்டும் போது நயன்தாரா என்னை மாமா என்று தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போ நா சொன்னேன் குழந்தைகளுக்கு காது குத்து பங்சன் நடத்தும் போது என் மடியில வைச்சி தான் காது குத்தனும் என்று நக்கலாக சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் நடந்தால் தாய்மாமன் சீர் எல்லாம் செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார்.