வழக்கமான கமர்சியல் சினிமாக்களை மட்டும் தமிழ் சினிமா கொண்டாடிய காலத்தில் திரைக்கதையில் பல மாறுபாடுடன் புதிய பரிமாணத்தில் 2008இல் வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இதில் சசிகுமார்,ஜெய்,சமுத்திரகனி மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருப்பர். இப்படத்தை சசிகுமார் எழுதி இயக்கியிருப்பார். அதன் பிறகு இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்டவராக வலம் வந்தார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இவரை ஒரு இயக்குனராக அறியப்பட்டதை தாண்டி நல்லதொரு நடிகராக அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
பின்னர் பேட்டை படத்தின் மூலம் நல்லதொரு குணச்சித்திர நடிகராகவும் உருவெடுத்தார். சமீபத்திய இவரின் படங்கள் தோல்வியை தழுவியது. கடைசியாக வெளிவந்த அயோத்தி திரைப்படம் மீண்டும் பழைய சசிகுமாரை காண செய்தது. மீண்டும் பழைய ஃபார்ம் இருக்கு தயாராகி வருகிறார் சசிகுமார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்தாலும் அவரது நிஜ வாழ்வில் சில நெருங்கிய நண்பர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார். சினிமா மீது ஏற்பட்ட மோகத்தால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து
ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேது திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். பாலாவிடம் பலப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவங்களை பெற்றுக் கொண்டு இயக்குனராக சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் அவதாரம் எடுத்தார். தன்னுடைய குருநாதர் பாலாவின் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் அவர் மீது எப்போதும் சசிகுமாருக்கு தனி மரியாதை உண்டு. இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம்
”தாரை தப்பட்டை”. இப்படத்தை சசிகுமாரே தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆரம்பிக்கும் பொழுது சொன்ன பட்ஜெட்டை விட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதில் வரும் பிணக்காட்சியை மட்டும் சுமார் 20 நாட்கள் எடுத்துள்ளார். இதனால் வீண் செலவு ஏற்பட்டு பட்ஜெட் எகிரி உள்ளது. மேலும் படம் நிறைவடைந்து வெளியான பிறகு சசிகுமார் வாழ்வில் பாத்திராத அளவுக்கு மிகப்பெரிய தோல்வியையும் நஷ்டத்தையும் அளித்துள்ளது. இதனால் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சசிகுமார்.
மேலும் இதன் காரணமாக இவரின் நெருங்கிய உறவினரையே இழந்தார். இதனால் மேலும் மனம் உடைந்த சசிகுமார் மீண்டும் மதுரைக்கு சென்று விட்டார்.பாலாவை நம்பி அந்தப் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்ததாலும் உறவினரை இழந்ததாலும் அவரை சினிமா விட்டு சிறிது காலம் முடங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் தான் அயோத்தி இது வெற்றி படமாக அமைந்தது அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இனிமேல் தயாரிப்பு பக்கம் செல்லாமல் நடிப்பில் மட்டும் காணும் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.